சமூகநலத் துறையி;ன் சார்பில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு குறித்த முனைப்பு முகாம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      சிவகங்கை
siva

சிவகங்கை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலத் துறையி;ன் சார்பில் குழந்தை திருமண தடுப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு குறித்த முனைப்பு முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சு.மலர்விழி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
             இம்முகாமினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, சமுதாயத்தில் ஆண்களும், பெண்களும் சரிசமமாக உள்ளனர். பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக உள்ளனர். நமது மாவட்டத்தில் கூட எண்ணிக்கையில் பெண்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், அதற்கேற்ப அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஏனென்றால், பெண்களை பொருளாதாரச் சுமையாகக் கருதுகின்றனர். இதனை தண்டனை மூலம் சீர்திருத்தம் செய்ய முடியாது. திட்டங்களினால் விழிப்புணர்வு ஏற்படுத்தவதன் மூலம் சீர்செய்ய முடியும். 

படித்த பெண்கள் திருமணத் திட்ட உதவி மூலம் ரூ.50,000ஃ-மும், தாலிக்கு தங்கமும் போன்ற நல்ல திட்டங்;களை விழிப்புணர்வு ஏற்படுத்துவது மூலம் குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்தலாம். சமுதாயத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாத இளம்பெண்கள் சுயஉதவிக் குழுவின் அறிவுரையின்படி தொழில் தொடங்கி சமுதாயத்தில் பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண் அதிகாரிகள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையைப் போக்கி சிறப்பாக பணிபுரிய வேண்டும். மேலும், பெண்களை பொருளாதாரச் சுமை என்று கருதாமல் அவர்களை படிக்க வைத்து சமுதாயத்தில் நல்ல உயர்நிலை அடைவது மூலம் முழுமையாக குழந்தை திருமணத்தை தடுக்கலாம் என

மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தெரிவித்தார்.
          இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  து.இளங்கோ, மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் சுந்தர், குழந்தைகள் நலக் குழுத் தலைவர் பால்ராஜ் மற்றும் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: