நெல்லை மாநகர பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருநெல்வேலி
nellai mdt school govt cycles valangal

நெல்லை

 

நெல்லை மாநகர பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

 

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுறம் பெண்கள் மேல்நிலை பள்ளி,சந்திப்பு மதிதா இந்து கல்லூரி மேல்நிலை பள்ளி ஆகிய

பள்ளிகளில் இந்த சைக்கிள்கள் வழங்கபட்டன ,மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளி மற்றும் மதிதா இந்த கல்லூரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் விஜிலா சத்தியானந்த் எம்.பி வழங்கினார் ,விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன்,நிர்வாகிகள் பரணி சங்கரலிங்கம்,தச்சை ராஜா,முன்னாள் மண்டல தலைவர்கள் மோகன்,ராமானுஜம்,முன்னால கவுன்சிலர் ஹயாத் , பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பையா ,ஆசிரியர் சொக்கலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பாளை கதீட்ரல் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் முத்துக்கருப்பன் எம்.பி. கலந்து கொண்டு சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கினார் ,இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி,அதிமுக நிர்வாகிகள் மகபூப் ஜான்,டால் சரவணன் ,ஹரிஹர சிவசங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ,விழாவில் மொத்தத்தில் 625 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: