முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான உயரம் குன்றியவர்களுக்கான தடகள மற்றும் இறகுப்பந்துபோட்டி நடைபெற்றது:

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சிவகங்கை
Image Unavailable

 காரைக்குடி-தேசியஅளவிலான“உயரம் குன்றியவர்களுக்கானதடகளமற்றும் இறகுப்பந்துபோட்டி”மற்றும் மாநிலஅளவிலான“மாற்றுத் திறனாளிகளுக்கானதடகளமற்றும் இறகுப்பந்து போட்டி-2017”ஆகியவை 20.01.2017 முதல் 21.01.2017 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை, அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டுமையமும், தமிழ்நாடு பாராவிளையாட்டுசங்கமும் இணைந்து நடத்தியது.

தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டனர்.  அதுபோல, மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், கை,கால்,மனநலம் குன்றிய, வாய்பேச முடியாத, காதுகேளாதோர், மற்றும் பார்வைகுறைபாடு உள்ளவர்கள் ஆக மொத்தம் 424 பாராவிளையாட்டு வீரர்-வீராங்கணைகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.

இதன் துவக்கவிழா 20.1.2017 அன்றுமாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இப்போட்டிகளை துவக்கிவைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச அளவிலான தடகளபோட்டியில் உயரம் தாண்டுதலில் பல பதக்கங்களை வென்ற தடகளவீரர் திரு. என். அன்னாவி, அவர்களும், துவக்க விழாவின் போது உடன் இருந்தனர்;.

தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணிவென்றது. புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தை பெற்றது.  இப்போட்டியினை தகுதிபெற்ற இருபது நடுவர்களும், 80 அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூர pமாணவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றினர். தேசியமற்றும் மாநிலஅளவிலான இப்போட்டிகளில் மொத்தம் 125 போட்டிகள் நடத்தப்பட்டன.

தேசிய அளவிலான போட்டிகளில்,அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்ச pபெற்ற 20 வீரர்-வீராங்கனைகள் 17 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும் ஆக மொத்தம் 30 பதக்ககங்களை பெற்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்திற்கும் பெருமைசேர்த்தனர். மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற 7 வீரர்-வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம் மற்றும்  2 வெண்கலப்பதக்கம் ஆக மொத்தம் 13 பதக்கங்களை வென்;றனர். அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற ஆர். பாலசுப்பிரமணின், எஸ். சிவராஜன் மற்றும் எ. செல்வராஜ் ஆகிய மூவரும் பங்குபெற்று நான்குபோட்டிகளிலும் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் மூவரும் வருகிற மார்ச் 2017-ல் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச பாராவிளையாட்டு போட்டிகளில் பங்குபெறதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

21.01.2017 அன்றுநடைபெற்ற நிறைவுவிழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச விளையாட்டுவீரர் திரு.சு. நடராஜன் (கண்காணிப்பாளர், சுங்கவரித்துரை,சென்னை) அவர்களும், தமிழ்நாடு பாராவிளையாட்டுமையத் தலைவர் என். திலீப் ராஜ் அவர்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

அழகப்பாபல்கலைக்கழக உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பாராவிளையாட்டுமைய இயக்குநர் பேரா. மு.சுந்தர் அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு பாராவிளையாட்டு சங்கத் துணைத் தலைவர் திரு. ஜெ.ரஞ்சித் குமார் நன்றியுரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு; மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. முரளி ராஜன், போட்டிகளின் அமைப்பாளர்கள்  முனைவர் கா.திவ்யாமற்றும் முனைவர் த.பி.யோகே~; ஆகியோர் இப்போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.

அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பாராவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகள் தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் நேற்று முன் தினம் துணைவேந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்