எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது. மேலும், 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
264 ரன்கள் குவிப்பு...
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஷார்ட்- ரென்ஷா ஜோடி...
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ்- டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். மார்ஷ் 11 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மேத்யூ, ஷார்ட் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 40 சந்தித்த நிலையில் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து ஷார்ட்- ரென்ஷா ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு ஆடினார். ஷார்ட்சுக்கு 2 கேட்சுகளை இந்திய அணியினர் மிஸ் செய்தனர். இதனால் அவர் அரை சதம் கடந்ததுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கானலி- மிட்செல் ஓவன்...
அடுத்து வந்த அலெக்ஸ் ஹேரி 9 ரன்னில் வெளியேறினார். சிறிது நேரத்தில் ரென்ஷா 30 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து கானலி- மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கானலி அரை சதம் அடித்து அசத்தினார். ஓவன் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேவியர் பார்ட்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்னில் வெளியேறினர். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி அடிலெய்டு மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


