முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய வாக்காளர் தின விழா கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 7-வது தேசிய வாக்காளர் தின விழா விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  18 வயது முடிந்தவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், வாக்காளர்கள் தேர்தல்களின்போது தாமாக முன்வந்து 100 சதவிகிதம் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிடம் முகத்தான், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், விழுப்புரம் மாவட்ட தலைமையகத்தில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  இப்பேரணியில் சுமார் 500 கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  இப்பேரணி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, விழுப்புரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலையா மேல்நிலைப் பள்ளியில் முடிக்கப்பட்டு, அங்கு விழா சிறப்பாக நடத்தப்பட்டது.

விழா விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு  தலைமையில் நடத்தப்பட்டது.  இவ்விழாவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவியர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து, தேர்தல்களின்போது, 100 சதவிகிதம் வாக்களித்து, அதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை உயர்த்துவது தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும். தேர்தல் நடவடிக்கைகளில் முனைப்புடன் பங்கேற்பது குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை பரவச் செய்வதற்கு இந்நாள் பயன்படுத்தப்படுகிறது.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தபோது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனுசுயாதேவி, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் வி.வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.அனுசுயாதேவி  தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை வாசிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்