நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட கிளன்வன்ஸ் பகுதியில் ஸ்போர்ட் கிளப் சார்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கேரளா உட்பட 18 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் கேரளா அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கேரளா அணி திருப்பூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் இரண்டாவது இடத்தை திருப்பூர் அணியும், 3_வது இடத்தை கோவை அணியும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளை ஸ்போர்ட் கிளப் பொதுச்செயலாளர் டேவிஸ் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: