ராசிபுரத்தில் தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      நாமக்கல்

 

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாரம் பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக 01.02.2017ம் தேதி தட்டம்மை ரூபல்லா தடுப்பூசி (எம்ஆர்) பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் பிள்ளாநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி தலைமையில் இராசிபுரத்தில் நடைபெற்றது. ஊர்வலமாக தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி பற்றிய பாதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு சென்றனர். இந்த ஊர்வலத்தில் தடுப்பூசி பற்றிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: