முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் மாநில அளவிலான முதியோர் இறகுப் பந்து போட்டி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் மாநில அளவிலான முதியோர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கியது.

                                       முதியோர் இறகுப்பந்து

நீலகிரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான முதியோர் இறகுப்பந்து போட்டிகள் ஊட்டியில் நேற்று துவங்கியது. வரும் 5_ந் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 35 வயது முதல் 70 வயது வரையிலான 8 பிரிவுகளில் போட்டிகளில் நடைபெற உள்ளது. இதில் 400_க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு ஆடுகின்றனர். ஊட்டி அண்ணா கலையரங்கில் நடைபெற்ற துவக்க விழாவில் தயாள் இறகுப்பந்து ஸ்போர்ட் இயக்குநர் டாக்டர் யுவ தயாளன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

                              பரிசுகள்

இந்நிகழ்ச்சியில் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளி முதல்வர் அஸ்வினி குமார் சக்சேனா, தமிழ்நாடு மாநில இறகுப்பந்து சங்க பொது செயலாளர் அருணாசலம்,  துணை தலைவர் டாக்டர் மாறன், போட்டி கண்ட்ரோலர் முகமது அலி, சீனியர் நடுவர் மோகன்தாஸ், பேட்ரன் டாக்டர் விஜயராஜ், நீலகிரி மாவட்ட இறகுப்பந்து சங்க தலைவர் ராஜேஷ், செயலாளர் ராமலிங்கம், இணை செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் கிறிஸ்டோபர் ஆக்ஸ், துணை தலைவர் சுனில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் 5_ந் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு இறகுப்பந்து சங்க தலைவர் அன்புமணி ராமதாசு கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago