கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புற்றுநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

 

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் கோவில்பட்டி ரோட்டராக்ட் அமைப்பின் சார்பாக சாலைபாதுகாப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது விழாவிற்கு கல்லூரி முதல்வர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் புவனேஸ்வரி வரவேற்று பேசினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் தேர்வு சுவn.ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.ஆங்கிலத்துறை தலைவர் ஜோசப்சுரேஷ் வாழ்த்துரை வழங்கினார் .வில்லிசேரி மண்டல மருத்துவர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்று நோய் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவற்றை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் நிர்மலா நன்றியுரை கூறினார்.இந்நிகழ்ச்சியினை ரோட்டராக்ட் தலைவர் இன்பராஜ் தொகுத்து வழங்கினார். விழாவில் ரோட்டராக்ட் செயலாளர் சரவணக்குமார், உறுப்பினர்கள், கல்லூரிபேராசிரியர், கல்லூரி மாணவ,மாணவியர்கள், கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: