சங்கரன்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்;ச்சி

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
snkl

சங்கரன்கோவில்

 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பயணியர் விடுதி முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய விருது பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் ஜட்சன் தலைமை வகித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் அருள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மகாலெட்சுமி மெட்ரிக் பள்ளி, வையாபுரி வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்கேற்று சாலை பாதுகாப்பு பற்றிய கோஸங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை காவலர் உமா, தனியார் பள்ளிகளை சேர்ந்த இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னிட்டு சின்னக்கோவிலான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசவரிமுத்து மற்றும் போலீசார் வாகன முகப்புகளில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: