முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பட்டறைகள் துவக்கவிழா

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி.-அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனம் மற்றும் பல்கலைக்கழகவணிக கூட்டுமையம் இணைந்துநடத்தும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தல்’ மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’ (குயளாழைn யனெ யுppயசநட யுஉஉநளளழசநைள ஆயமiபெ ரூ ஊழஅpரவநச ர்யசனறயசந யனெ நேவறழசமiபெ)ஆகிய தலைப்புகளிலான இரு இரண்டு நாள் பயிற்சி பட்டறைகளின் துவக்கவிழா இன்று (9-2-2017) பல்கலைக்கழக பட்டமளிப்பு கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது.

அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தமது தலைமை யுரையில், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரியதொழிலாக ஜவுளி மற்றும் பின்னாலாடை தொழிலே உள்ளது என்றும், திருப்பூரிலும் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களிலும் ஜவுளி மற்றும் பின்னாலாடைகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்றும் கூறினார். ஆனால், நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள் தயாரித்தலில் மிகக் குறைவான நிறுவனங்களே ஈடுபட்டு வருகின்றன என்றும், ஆனால் இந்தப் பிரிவில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளையும் மற்றும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கமுடியும் என்றும் தெரிவித்தார். எல்லாவகையான நிறுவனங்களிலும் ‘ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’ பொறியாளர்களின் தேவை உண்டு. மென்பொருள் பணியாளர்களின் வேலையிலிருந்து மிகவும் வேறுபட்டது இந்தபணி. எனவே இதன் மீது ஆழமானவிருப்பம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது சிறப்புற அமைகிறது. இது சார்பான வேலைகளுக்கு கணினிதுறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். நெட்வொர்க்கிங் பயிற்சிசான்றிதழ்களை பலமுன்னணிநிறுவனங்கள் வழங்குகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம், சிஸ்கோ நிறுவனம் போன்றவை வழங்கும் நெட்வொர்க்கிங் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் உடையவை. அஸ்பயரிங் மைண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தேசிய பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை-2016-ன் படி,கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 36.6மூவேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் செயலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி, 2014 முதல் 2024 ஆண்டுக்குள் புதிதாக 96,600 வேலைவாய்ப்புகள் ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் துறைகளில் உருவாகும் என அறியமுடிகிறது. 

ஒரு துறையில் பட்டம் பெறுவது என்பது வேறு, உபயோகப் படுத்துவதில், பழுதுபார்ப்பதில் நிபுணர் ஆவது என்பது வேறு. நாகரீக துணை அணிகல பொருட்களின் தேவைகளுக்கு இன்றும் பல்வேறு பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே சார்ந்து இருக்க வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். இதை விடுத்து, கணினியில் ஏற்படும் சிறுபிரச்சனைகளை தாமாகவே சரிசெய்யவும், நாகரீகதுணை அணிகல பொருட்களின் தேவைகளைத் தாமாகவே நிவர்த்தி செய்து இம் மாதிரியானச் சேவைகளை மற்றவர்களுக்கு அளிப்பதன் மூலம் சுய வேலைவாய்ப்பினையும் உருவாக்கிக் கொள்ளலாம். இம் மாதிரியான, 'ஹார்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங்’மற்றும் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’ துறைகள் நிறுவனவேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயமாகவும் தொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும். தனிநபராகவோ அல்லது குழுவாகவோ இதனைச் செய்யாலாம். குறைந்த முதலீட்டில் நிறையலாபம் ஈட்ட ஏதுவான துறைகள். ஆகவே இந்த இரண்டுநாள் பயிற்சிபட்டறை வழியாக பெறப்படும் பயிற்சிகளை ஆரம்பமாகக் கொண்டு, இந்தத் துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியலாம்.”என்று எடுத்துரைத்தார்.

அழகப்பாபல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் முனைவர். கா. மணிமேகலைத மதுசிறப்புரையில்,“ஆடைகளில் அணிகல பொருட்களை சேர்க்கும் போது அதுமதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனைக்கு வருகிறது.  அப்போது அதன் சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. கற்பனைத்திறன் ,தனித்தன்மை ,சந்தைப்படுத்தும் திறன், அழகுணர்ச்சி ஆகியவற்றை படிக்கும் போதே வளர்த்துக் கொண்டால் ,வாழ்வில் வெற்றிபெறலாம். வாய்ப்புகளை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துபவர்களே வாழ்வில் முன்னேறுகின்றனர். இது ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகலபொருட்கள் தயாரித்தல்’மற்றும் ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’களின் காலமாகும். ‘கணினிவன்பொருள் ரூவலையமைப்பு’ துறைகளில் இப்பொழுது இருபாலரும் வேலைசெய்ய ஆரம்பித்துள்ளார்கள். இத் துறைகளில் திறன்களை வளர்த்துக் கொண்டால் முன்னேறலாம் இதைத்தான் நம் முன்னோர்கள் 'கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' மற்றும் 'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' என்றனர்”என்று கூறினார்.

அழகப்பாபல்கலைக்கழககல்வியியல் புலமுதன்மையர் முனைவர். ப. சிவக்குமார் தமது வாழ்த்துரையில், இளைஞர்கள் மற்றும் நுகர்வோர் அதிகமுள்ள இடங்களில்தான் ‘நவ நாகரீக ஆடை சார்ந்த அணிகல பொருட்கள்;’மற்றும் ‘கணினிவன் பொருள் ரூவலையமைப்பு’களைச் சந்தைப்படுத்த இயலும். உலகளவில் இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகமாக 356 மில்லியன் பேர் உள்ளனர் மற்றும் நுகரும் பழங்கமும் இங்கு அதிகரித்து வருகின்றது. ஆகவே இவ் விருதுறைகளிலும் வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல் சுயதொழில் செய்யவும் ஏற்றத் துறைகள் ஆகும்” என்றார்.

இந்நிகழ்வில் ,அழகப்பாதிறன் மேம்பாட்டுநிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பூ.தர்மலிங்கம் வரவேற்புரையாற்றினார் மற்றும் முனைவர் சி.பாலகிரு~;ணன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்