முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      தமிழகம்
polies

Source: provided

திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  

திருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.  இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் பணியாளரான சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் தாக்கிய வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இது வழக்கின் விசாரணைக்கு முக்கிய சாட்சியமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அஜித் குமாரை போலீசார் தாக்கிய வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டி.ஜி.பி.,க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதியுள்ளார். ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், தன்னை மிரட்டிய நிலையில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சுழற்சி முறையில் 2 போலீசார், பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.   24 மணி நேர பாதுகாப்பு பணி என உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு ஆயுதப்படை போலீசார், ஒரு உள்ளூர் போலீசார் பணியில் உள்ளனர். மடப்புரம் கோவில் உதவி கமிஷனர் அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து