முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனல்பறக்கும் அதிமுக அரசியல்: 30 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு யாருக்கு ?

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை - தமிழகத்தின் தற்போதைய அரசியல் பரபரப்பில், அ.தி.மு.க.வில் குறிப்பிட்ட 30 எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற குழப்பம் மேலோங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்துடன்தான் முதல்வராகப் போவதாக சசிகலா அறிவித்துள்ளார்.  சட்டப்பேரவை யில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியில் 5 பேர் மட்டுமே இணைந் துள்ளனர். மற்றவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக சசிகலா கூறிவந்தாலும், அந்த தரப்பில் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை.

பன்னீர் அணியில் 6 பேர்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் தற்போது 135 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளிக்கும் 5 பேர் என 6 பேர் தனி அணியாக உள்ளனர். மற்றவர்களில் பேரவைத் தலைவர் தவிர 128 பேர் தற்போது சசிகலா அணியில் உள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

29 பேரும் யாருக்கு ஆதரவு : 
மொத்தம் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் 135 பேரில் 30 பேர் தலித்கள். இவர்களில் ஒருவர் தற்போது ஓபிஎஸ் அணிக்கு வந்துவிட்டார். மற்ற 29 பேரும் யாரை ஆதரிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கிடையில், முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தலித் எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து வருவதாக கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ஆனால், அந்த எம்எல்ஏக்கள் இரட்டை மனநிலையில் இருப்பதாகவும், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளைப் பொறுத்து ஆதரவு நிலையை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago