முடிவைத்தானேந்தல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அல்பென்ட்சோல் மாத்திரைகள் கலெக்டர் எம்.ரவி குமார் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
10 2 2017 - P1

தூத்துக்குடி.

 

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் கலெக்டர் எம்.ரவி குமார் மாணவ, மாணவிகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரைகளை வழங்கி பேசியதாவது:தூத்துக்குடி மாவட்ட பகுதியிலுள்ள 1583 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 119; தனியார் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கும் 1477 அங்கன்வாடி மையத்திலுள்ள குழந்தைகளுக்கு வயிற்று புழுவை தடுக்கும் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்;கு வயிற்று குடற்புழுவை தடுக்க தமிழகம் முழுவதும் அல்பென்ட்சோல் என்கிற மாத்திரை ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட பகுதியில் அல்பென்ட்சோல் மாத்திரை வழங்குவது சம்பந்தமாக 49 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 நகர்நல மையங்கள் மூலமாக ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மூலம்; குடற்புழு நீக்க நாளான (10.02.17) இன்று இந்த மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. சிறுகுடலில் உள்ள இரும்புசத்தை கொக்கிபுழு, நாடாபுழு என்கிற புழுக்கள் சாப்பிட்டு விடுகின்றன. இதனால் மேற்கண்ட நோய் தாக்கத்திற்கு குழந்தைகள் ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்க தேசிய அளவில் குழந்தைகளுக்கு குடற்புழுவை ஒழிக்க கூடிய அல்பென்ட்சோல் மாத்திரை வழங்கப்படுகிறது.பள்ளி செல்லாத குழந்தைகளும் அங்கன்வாடி மையத்தில் சென்று அல்பென்ட்சோல் மாத்திரை உட்கொண்டு வருங்காலத்தில் ஆரோக்கியமான குழந்தைகளாக வாழ வேண்டும் என்றார்.;திரைகள் குறித்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட முதன்மைக்கல்லி அலுவலர் இராமகிருட்டிணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மருத்துவ அலுவலர் மரு.ஆசிக் அல் முகம்மது, வட்டார மருத்துவ அலுவலர் மரு.நந்திக்கேஸ்வரி, தலைமையாசிரியர் ஜெயகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: