முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் சீனக் கடலில் மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீனா திட்டம்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் - தென் சீனக் கடலில் உள்ள தீவுகளில் மின்சாரத் தேவைக்காக சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடும் எதிர்ப்பு
தென் சீனக் கடல் பகுதியின் பெரும் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்து கடற்படை தளங்களை அமைத்து வருகின்றது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மேலும், சர்வதேச நாடுகள் மத்தியில் இந்த விவகாரத்தை கொண்டு செல்லும் முயற்ச்சியில் அந்நாடுகள் ஈடுபட்டுவருகின்றன.

மிதக்கும் அணு உலைகள்
தென்சீனக் கடலில் உள்ள சில தீவுகள் மற்றும் சீன அரசு அமைத்து வரும் செயற்கைத் தீவுகள் ஆகியவற்றின் மின்சாரத் தேவைகளுக்காக, கடலில் சுமார் 20 மிதக்கும் அணு உலைகள் அமைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 அணு உலைகள்
இதுதொடர்பாக, சீன பாதுகாப்பு அமைச்சக அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின், இணை இயக்குநர் வாங் யேய்ரன், கூறுகையில் “இயற்கைச் சீற்றங்களில், மிதக்கும் அணு உலைகள் சிறிய அளவிலான பாதிப்பை மட்டுமே சந்திக்கும். ஏதேனும், அவசரமான சூழ்நிலை ஏற்பட்டால் கூட அணு உலைகளை எளிதாக கையாளலாம். பராமரிப்பு செய்வதும் எளிது. தென் சீனக் கடலில் 23 அணு உலைகள் படிப்படியாக அமைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு கண்டனம்
ஏற்கனவே, தென் சீனக் கடற்பகுதி சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வரும் நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை மேற்கண்ட நாடுகளிடையே மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலக நாடுகள் மீண்டும் சீனாவுக்கு கண்டனம் தெரிவிக்க தொடங்கிவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்