முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய கச்சா எண்ணெய் கசிவு துகள்கள் அகற்றும் பணி கலெக்டர்டி.பி.ராஜேஷ் பார்வையிட்டார்

சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2017      கடலூர்
Image Unavailable

கடலுார்,

 

கலெக்டர்டி.பி.ராஜேஷ், தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய கச்சா எண்ணெய் கசிவு துகள்களை 200 நகராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றும் பணியை பார்வையிட்டார்.கலெக்டர்தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,200 நகராட்சி பணியாளர்களைக்கொண்டு தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை மற்றும் தாழங்குடா கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ள கச்சா எண்ணெய் கசிவு துகள்களை அகற்றும் பணி இன்று காலை 7.45 மணிமுதல் நடைபெற்று வருகிறது எனவும், இப்பணி இன்னும் சில மணிநேரங்களில் முடிந்துவிடும் எனவும், பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் எண்ணெய் கசிவு துகள்களை அகற்றி வருகிறார்கள் எனவும், இதேபோன்று கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஏதேனும் எண்ணெய் கசிவு துகள்கள் ஒதுங்கியிருந்தால் அவற்றையும் அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும், இதுகுறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், கடலூர் வட்டாட்சியர் அன்பழகன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்