கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்றது. திங்கட்கிழமை தோறும்; கலெக்டர் அவர்கள் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், இனயம் சின்னத்துறை மீனவ கிராமத்தில் 02.11.2013 அன்று இரவு கடற்கரையில் ஏற்றி நிறுத்தப்பட்ட 3 வள்ளங்கள் தீ விபத்துக்களாகி சேதம் அடைந்தது. இந்த வள்ளத்தின் உரிமையாளர்கள் இனயம் சின்னத்துறையை சார்ந்த எம். மரியசெல்வன் மற்றும் ஜெ. சகாயதாசன் ஆகியோர்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500ஃ-க்கான காசோலைகளையும், பி. ஆரோக்கியதாஸ் என்பவருக்கு ரூ. 2 ஆயிரத்து 500ஃ-க்கான காசோலையினையும், சௌதி நாடு, அஜ்மானின் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட (12.07.2016 மற்றும் 14.07.2016) கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 19 மீனவர்களின் குடும்பம், வறுமை நிலையினை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சத்திற்கான காசோலைகள் என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ. 38 இலட்சத்து 17 ஆயிரத்து 500ஃ-க்கான காசோலைகளை, கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வளக் கூட்டுறவுத் தலைவர் எம். சேவியர் மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.இளங்கோ, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) லாமக் ஜெயக்குமார், உதவி இயக்குநர் நாபிராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எம். சந்திரன், என்.என்.ஸ்ரீஐயப்பன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
- திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ரதம்.