முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அந்த்யோதயா நவீன எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய அமைச்சர் பிரபு துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சாதாரண மக்கள் பயன் அடையும் வகையில் முழுக்க முழுக்க முன்பதிவு இல்லாத அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கிவைத்தார்.  பட்ஜெட்டில் 4 புதிய ரயில்கள் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் ஹூம்சாபர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது அதிக போக்குவரத்து உள்ள பகுதியான மும்பை-டாடா நகர் இடையே அந்த்யோயா நவீன எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கிவைத்தார். இரண்டாவதாக எர்ணாகுளம்-அவுரா இடையேஅந்த்யோயா நவீன எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என்று முதல் அந்த்யோயா ரயிலை துவக்கி வைத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

நவீன வசதிகள்:
இந்த ரயில் பெட்டிகளில் இதர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள முதல் வகுப்பில் உள்ள வசதிகள் போல் செய்யப்பட்டிருக்கும். பெட்டிகள் கலர் கலராக இருக்கும். இருக்கைகள் பஞ்சுமெத்தைகளால் அமைக்கப்பட்டிருக்கும். செல்போன்கள் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை செய்யப்படும். தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த்யோயா என்பதன் அர்த்தம் சாதாரண மனிதன். அதாவது நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கு எங்கள் அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை இதுகாட்டுகிறது என்று பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார். இந்த ரயிலுக்கு கட்டணம் விபரம் பற்றி கேட்டதற்கு இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று பிரபு தெரிவித்தார். ஆனால்  10 முதல் 15 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் ரயில்பெட்டிகளை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதான் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்