Idhayam Matrimony

மாநில அளவிலான தற்காப்புக்கலை போட்டி: ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி,

 

மாநில அளவிலான ஓவினாம் தற்காப்புக் கலைப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து 18.02.2017 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் யோகிராஜூ 75 – 80 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் இப்போட்டியில் முகம்மது ராசித் என்ற மாணவன் 50 – 55 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை மாநகர துணை கமிஷனர் சந்திரகாந்தன் பரிசும் சான்றதழும் வழங்கிப் பாராட்டினார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் முதல்வர் சு.து.ஏ. பெல் அவர்களும், துணை முதல்வர் கஸ்தூரி பெல் அவர்களும் மற்றும் ஆசிரிய-ஆசிரியர்களும் பாராட்டினர்.மாநில அளவில் முதலிடம் பெற்ற யோகிராஜூ அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago