ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு

வியாழக்கிழமை, 23 பெப்ரவரி 2017      திருநெல்வேலி

செங்கோட்டை,

 

ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் சார்பாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவு வழங்கப்பட்டது. செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் வியாழக்கிழமை தோறும் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து முழு உடல் பரிசோதனை செய்துவருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் முன்வந்து மதிய உணவு வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக செங்கோட்டை செல்வகணபதி மார்க்கெட்டிங் நிறுவனம் மாதத்தில் முதல் வியாழக்கிழமை தோறும் கர்ப்பிணிப்பெண்களுக்கு முட்டை, தானியங்கள், பழங்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு செங்கோட்டை செல்வகணபதி மார்க்கெட்டிங் உரிமையாளரும், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் தலைவருமான செல்வகணபதி தலைமை தாங்கினார். செயலாளர் பிபிஎம் முருகேசன், துணைத்தலைவர் வேலுச்சாமி, இணைச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் சேகர், முன்னாள் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஸ்கண்ணன் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மருத்துமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாரல் உறுப்பினர்கள், கர்ப்பிணிப்பெண்கள், தாய்மார்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: