விலையில்லா வீட்டுமனைப் பட்டா அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

siva

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மாரநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்;குடியினர் நலத்துறை சார்பில் 84 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா மற்றும் வேளாண்மைத்துறை சார்பாக 3 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில், மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

தழிழக அரசின் நலத்திட்டங்கள்

            இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர்;  பேசும்போது தெரிவித்ததாவது, இந்த அரசு பல்வேறு வகையில் ஏதாவது ஒரு திட்டத்தை பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கருவறை முதல் கல்லறை வரை பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு  பேறுகால உதவியாக ரூ.12,000ஃ-த்திலிருந்து ரூ.18,000ஃ- ஆக உயர்த்தி உள்ளது. தமிழக முதல்வர் புதிதாக கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான வேலைக்கு செல்லும் மகளிர்களுக்கு இருசக்கர வாகனம் மானியம் விலையில் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் பெயரிலேயே 84 விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மேலும், மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா  செயல்படுத்தி வந்த பல நல்லத் திட்டங்களில் அம்மா திட்டம், புதுவாழ்வு திட்டம், பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கத்திலிருந்து 8 கிராம் தங்கம், கல்வி மற்றும் பல்வேறு திட்டங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம் என மாண்புமிகு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

            இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது, இந்த தமிழக அரசு பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டத்தில் சீமைக்கருவேல் மரங்களை அழி;ப்பது குறித்த விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் அதிகம் உள்ளது. திறந்தவெளியில் மலம்  கழிப்பது மூலம் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன. ஆகையால், வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்தும,; மேலும், பன்றிக்காய்ச்சல் என்பது கட்டுப்படுத்த முடியாத நோய்  இல்லை எனவும், வீட்டில் உள்ள பெண்கள் கணவன் மற்றும் குழந்தைகள் வெளியிடம் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பும் போது கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம் என்று கூறினார்.

               மேலும், 1962-ல் நிலம் ஆர்ஜிதம் செய்து எடுக்கப்பட்டுள்ளது. அப்போது 34 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 84 பேர்கள் இந்த இடத்தில் வீடு கட்டி குடியிருக்கிறார்கள். 1962-லிருந்து இந்தப் பட்டா வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து கொண்டே இருந்தது. அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பெற்ற மனுக்களை பரிசீலனை செய்து, 1962-லிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்த கோப்பினை தேடிக் கண்டுபிடித்து எடுத்து மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து விரைவாக முயற்சி செய்து இந்தப் பட்டாக்கள் இன்று உங்களுக்கு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தெரிவித்தார். 

                 இந்நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.மாரியப்பன்கென்னடி, மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ மற்றும் துறைச் சார்ந்;த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ