முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.822.70 கோடியில் பிராட்வே ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2026      தமிழகம்
CM-1-2026-01-29

சென்னை, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை மாநகரின் முக்கிய இடத்தில் பிராட்வே நிலையம் அமைந்துள்ளதாலும், மக்கள் தொகை பெருக்கத்தினாலும், இட நெருக்கடியால் வெளியூர் செல்லும் பேருந்துகள் 2002-ம் ஆண்டு நவம்பரில் கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாக மாற்றப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் சிறுகடைகள் அதிகமாக உள்ளதாலும், இடநெருக்கடியாலும், இப்பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.

அதன்படி, பிராட்வே பேருந்து நிலையத்தில் 822 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டம் உயர் நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் புறநகர் ரெயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 9 தளங்களைக் கொண்ட காம்ப்ளக்ஸ் கட்டிடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டிடம் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளது. இவை 73 பேருந்து நிறுத்தங்களும், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த திட்டமானது 26,240 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தில் மொத்தம் 1,36,580 சதுர மீட்டர் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று முக்கிய கட்டிட பிரிவுகளைக் கொண்டு உள்ளது. இத்திட்டத்தின் மொத்த பரப்பளவு 1,08,290 சதுர மீட்டர் ஆகும். இதில் இரண்டு அடித்தளங்கள் ஒரு தரைத்தளம் மற்றும் எட்டு மேல் தளங்கள் கொண்டதாகும். பயணிகள் நேரடியாக உயர்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், என்.எஸ்.சி. போஸ் ரோடு, எஸ்பிளேடு ரோடு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. ரோடு நுழைவு மற்றும் வெளி யேற்று அமைப்பு வழியாக பேருந்து நிலையம் முதல் அடித்தளத்தில் அமைந்து உள்ள பயணிகள் கூடத்தின் வழியாக தரை மற்றும் முதல் பேருந்து நிலையங்களுக்கு செல்லும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து