Idhayam Matrimony

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

வியாழக்கிழமை, 29 ஜனவரி 2026      இந்தியா
Modi 2024-12-09

புதுடெல்லி, 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு எப்பொழுதும் தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நேற்று கூறியதாவது:-பட்ஜெட் கூட்டத்தொடர் மிகமிக முக்கியமானது. இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

பாராளுமன்றத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.  உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை 140 கோடி இந்திய மக்களின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.  2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியம். இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

ஜி.எஸ்.டி. வருவாயில்1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருக்கிறோம். 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம். நீண்ட கால பிரச்சனை என்ற நிலையில் இருந்து நீண்ட கால தீர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது. பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து