சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை யாரும் தாக்கவில்லை: தன்னை தாக்கியதாக கூறி நாடகமாடுகிறார் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
DSC 0012

கோவில்பட்டி

சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை யாரும் தாக்கவில்லை தன்னை தாக்கியதாக கூறி நாடகமாடுகிறார் என கோவில்பட்டியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசினார்

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில்திடலில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை தலைவர் மாணிக்கராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில் அதிமுக எக்கு கோட்டை. பல சோதனைகளை கடந்துதான் இன்று கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. எம்ஜீஆர் இக்கட்சியை தண்ணீர் விட்டு வளர்க்கவில்லை. ரத்தத்தை சிந்திதான் வளர்த்தார். கருனாநிதி புரட்சி தலைவருக்கு கொஞ்சமா துரோகம் செய்தார். கருனாநிதி, எம்ஜீஆருக்கு செய்த துரோகத்திற்க்கு எமன் கூட அவரை இன்று அழைக்க தயங்குகிறான். அண்ணா இறந்த உடன் சீனியர் தலைவர்களை புறம் தள்ளிவிட்டு முதல்வர் பதவியை பறித்தவர்தான் கருணாநிதி. அவர் பிள்ளை ஸ்டாலினும் தகப்பன் என்ன செய்தாரோ அதையே தான் செய்கிறார் 90 வயதுக்கும் மேல் உள்ள அன்பழகனை புறந்தள்ளிவிட்டு குடும்பகட்சியாக திமுகவை மாற்றியவர்கள் இன்று அதிமுகவை குடும்ப கட்சி என்கிறார்கள். சிரிப்புதான் வருகிறது. கட்சியின் இக்கட்டான சூழ்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் கேட்டுகொண்ட காரணத்தினால் தான் கட்சி பொது செயலாளர் சசிகலா முதல்வர் பொறுப்பினை ஏற்க ஒத்து கொண்டார். அதனை முன் மொழிந்து முதல் கையெழுத்து போட்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். அன்றைக்கு எதிர்க்கமால் திமுகவுடன் கூட்டு சேர்ந்து மு.க.ஸ்டாலினை முதல்வராக்க சதி செய்தார் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினை யாரும் தாக்கவில்லை, ஆனால் அவர் தான் சபாநாயகர் மீது குற்றம்சாட்டி தன்னை தாக்கி சட்டையை கிழித்தாக நடிக்கிறார். சட்டசபையில் திமுக நடத்திய அராஜகம் அவர்களின் சுயரூபத்தினை மக்கள் பார்த்து கொண்டனர். திமுகவுடன் கூட்டு சேர்ந்த ஓ.பன்னீர்செல்வர் விழாவில் ஜீரோ பன்னீர் செல்வமாக மாறிவிடுவார். அவருடன் சேர்ந்தவர்களுக்கும் அதே கதி தான். வாக்களித்த மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்தினையும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்கலாம் அதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. ஆனால் அரசியல் முடிவு என்பது எங்கள் கட்சியின்தலைமையின் முடிவு தான். எதிரிகள் எங்களைவ வீழ்த்த நினைத்தாலும் இன்றைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் அவரது ஆட்சி இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறுகிறது. இது தான் கட்சி தொண்டர்கள் அவர்களுக்கு கொடுத்த பரிசு என்றார்.

விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரி, ஓட்டபிடாரம் எம்எல்.ஏ. சுந்தராஜ், முன்னாள் எம்எல்ஏ. சின்னப்பன், முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன், ஒன்றியசெயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், கயத்தார் செல்வகுமார், அம்மாபேரவை ஒன்றிய செயலாளர்கள் ஈஸ்வரபாண்டியன், வண்டாணம் கருப்பசாமி, அம்பிகா வேல்மணி, பாண்டவர்மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் அன்புராஜ், அம்மாபேரவை கடலையூர்ரோடு செண்பகமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், காந்திநகர் 1வது வார்டு செயலாளர் மாடசாமி, 36வார்டு செயலாளர் வைகுண்டபாண்டியன், மாவட்டபிரதிநிதி பொன்னுச்சாமி, நகர மாணவரணி நகரசெயலாளர் எல்.எஸ்.பாபு, பீவி. சீனிவாசன், அம்மா பேரவை பாலாஜி, இளைஞர் பாசறை பழனிக்குமார், எஸ்.கே.மாயா, சிவகாடு பாலமுருகன், அமைப்புசாரா அணி விஜயக்குமார், டிரைவர் செல்லையா, மகளிரணி கௌசல்யா, மாவட்ட இணைசெயலாளர் கலைவாணி கோவிந்தராஜன், நிலவளவங்கி தலைவர் கணபதிபாண்டியன், இயக்குனர் ஜெமினி, அதிமுக வழக்கறிஞர்கள் அணி சங்கர்கணேஷ், வி.வி.முருகேசன், விஜயபாஸ்கர், கோபி, நல்லவன், எம்ஜீஆர் மன்றம் குருநாதன், ஆ. கணேசன், அம்மாபேரவை சந்திரசேகர், வானரமூட்டி அலங்காரபாண்டியன், 28வது வார்டு செயலாளர் மாரிச்சாமி, 29வது வார்டு நகர கூட்டுறவு வங்கி கடன்சங்கதலைவர் மாரியப்பன், கூட்டுறவு பால்சொஸைட்டி தலைவர் வெள்ளத்துரை, பெரியசாமி பாண்டியன், ஆபிரகாம்அய்யாத்துரை, கேண்டீன்நைனா,  உட்பட பலர் கலந்து கொண்டனர். 7000 பேருக்கு வேஷ்டி, சேலை, நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது. விழா ஏற்பாடுகளை பெருநகர செயலாளர் எஸ். விஜயபாண்டியன் மிக சிறப்பாக செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: