கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் புவனகிரியில் இலவச பொது மருத்துவ முகாம்

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கடலூர்

சிதம்பரம்,

 

மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவமுகாம் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் கடலூர் மாவட்டம் புவனகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.முகாமிற்கு முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார். ஓன்றிய செயலாளர் சிவபிரகாசம் மாவட்ட பேரவை செயலாளர் உமாமகேசுவரன் இளைஞரணி செயலாளர் செழியன் மாவட்ட இணை செயலாளர்கள் லெனின் செஞ்சி லட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். புவைகிரி நகர செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார். முகாமில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் என்.முருகுமாறன் ஆகியோர்கள் கலந்துக் கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்கள் முகாமில் பொதுமக்களுக்கு சிறப்பு பரிசோதனைகளாக இதயம் மற்றும் இதய நெஞ்சக அறுவை சிகிச்சை, கர்ப்ப பை நோய்கள், மார்பக புற்றுநோய் மருத்துவம், மூட்டுவலி, இடுப்பு வலிக்கான சிகிச்சைகள், கண் நோய் சிகிச்சைகள், காது மூக்கு தொண்ட, நுரையீரல் சிகிச்சைகள், சிறுநீரக நோய்கள் பரிசோதனை, மூளை மற்றும் நரம்பு மண்டலம், இரத்த குறைபாடு, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் போன்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை புதுவை ஆறு படை வீடு மருத்துவ கல்லூரியிலிருந்து மருத்துவர்கள் கலந்துக் கொண்டு அலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். இதில் புவைகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள 630 நோயாளிக்கு அனைத்து சம்மந்தப் பட்ட நோய்கறுக்கு சிகிச்சை அளித்தார்கள். சிகிச்சை பெற்ற அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் சிதம்ப்ரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் ரகுராமன். முன்னாள் கவுண்சிலர் லதா.கூட்டுறவு சங்க தலைவர் இந்திரா இளைஞரணி செயலாளர் சிவஞாணம், நகர தலைவர் தங்க மகாலிங்கம். உள்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: