விஐடியில் தொலை மருத்துவ தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கம் விஞ்ஞானிகள் மருத்துவ நிபுணர்கள் 300 பேர் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      வேலூர்
vit

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட  மருத்துவ நிபுணர்கள்  மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் மாநாட்டு சிறப்பு மலரினை விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் வெளியிடபெங்களூரில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் தேசிய கருதத்தரங்கம் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின்4 வது தேசிய மாநாடு மற்றும் சங்கத்தின் விஐடி கிளை தொடக்க விழா விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பள்ளி மற்றும் இந்திய தொலை மருத்துவ சங்கம் இனணந்து  இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இதில் நாடு முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ நிபுணர்கள் பொறியாளர்கள் ஐஎஸ்ஆர்ஒ விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டீன் முனைவர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் 4 வது ஆண்டு மலரினை வெளியிட பெங்களூருவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வவி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். இதில்   இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் விஐடி கிளை தொடங்கப்பட்டது  நிகழ்ச்சியில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவரும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.செல்வகுமார் பங்கேற்று பேசியதாவது: இந்திய தொலை மருத்துவ சங்கம் 2001 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மாநில தலைநகரங்களில் சங்கத்தின் கிளைகளை தொடங்க வேண்டும்  என்ற வகையில் 2006  ம்ஆண்டில் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்து .இது 6 வது கிளையாகும் நாட்டில் கிராம புறம் மற்றும் தொலை தூர பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான அணைத்து  மருத்துவ வசதிகளும் குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே.  எங்கள் சங்கத்தின்  மூலமாக மருத்துவ துறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பாராமெடிக்கல் பணியாளர்கள் தொழில் நுட்பாளர்கள் ஆகியோரை இனணத்து தொலை மருத்துவ வசதி வழங்கி  வருகிறோம்.இதில் இந்திய  வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தொலை மருத்துவ முறையில் நடைபெற்று வருகின்றன. இப் பணியில் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பெங்களூரூவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் மூனைவர் வீரேந்திர குமார் பங்கேற்று பேசுகையில்  மக்களில் பெருபான்மையினர் கிராம புறங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற வகையில் இந்திய தொலை மருத்துவ சங்கம் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துணையாக இருந்து வருகிறது என்றார்.  இதில் சங்கத்தின் மாநில தலைவரும் சென்னை வெல்கேர் ஹெல்த் சிஸ்டம் நிறுவனர் டாக்டர் டி.செந்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.கே.கணபதி லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தின் தலைமை மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் விக்ரம் தபோலா பேராசிரியை வித்யா ராம்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி உயர் மருத்துவ மையத்தில் நடைபெற்ற நோயாளிக்கான  தைராய்டு அறுவை சிகிச்சை நேரிடையாக காணொலி காட்சியின் மூலம் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: