முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் சீமைகருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2017      கடலூர்

கடலூர்.

 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற உத்திரவிடப்பட்டுள்ளது. சீமை கருவேல மரங்கள்  நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. மேலும் மண்ணின் உயிர்சத்துகள் மற்றும் கனிம சத்துக்களையும் உறிஞ்சுவதால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும் காரணமாகின்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 01.03.2017 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீமை கருவேல மரங்கள்  அகற்றுவது தொடர்பான  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  மேற்காணும் கூட்டத்தில் கடலூர் சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஆகியோரும் அனைத்து துறை சார்நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.கடலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 25மூ சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான பட்டா இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,  அரசு விடுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை ஒரு வார காலத்திற்குள் அகற்றிட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்பாக உள்@ர் நபர்களை கொண்ட குழுக்கள் அமைத்து  கண்காணிக்கவும், மரங்களை அகற்றிய இடத்தில் பயன்தரக்கூடிய  மரங்களை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.  பொதுமக்களும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தினரும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முழு ஒத்துழைப்பு அளித்து இதனை ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட    மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்