முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் 878 மாணவ, மாணவியருக்கு ரூ.34 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      நீலகிரி

ஊட்டியில் 878 மாணவ,மாணவியருக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி சி.கோபாலகிருஷ்ணன் எம்.பிஆகியோர்  வழங்கினார்.

                       878 விலையில்லா மிதிவண்டிகள்

தமிழக அரசின் பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா ஊட்டியிலுள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்று பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்கள் என மொத்தம் 878 மாணவர்களுக்கு ரூ.34.13 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது_

                   கல்வி வளர்ச்சியில் முதலிடம்

மாணவர்களுக்கு முறையான கல்வியை அளித்துவிட்டால் நாடு முன்னேறிவிடும் என்ற அடிப்படையில் மறைந்த முதலமைச்சர் அம்மா கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார். கல்வி வளர்ச்சிக்குறியீட்டில் பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அதற்குக்காரணம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு வழங்குகிறது. இதற்கு அடிப்படை காரணம் முன்னாள் முதலமைச்சர் அம்மா

பிள்ளைகள் மீது பேரண்பு கொண்டவர். பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கை முன்னேறி விடும் என்று செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறை எங்குமே இல்லாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பள்ளியில் படிப்பவர்களுக்கு தேவையான ஜமன்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில் போன்ற பொருட்களை வாங்குவதற்குக்கூட கஷ்டப்பட்ட காலம் உண்டு.

                               நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை

ஆனால் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் மட்டும் போதும், சீருடையில் இருந்து புத்தகம், நோட்டுபுத்தகம், புத்தகப்பை, காலணி, ஜான்ட்ரி பாக்ஸ் போன்ற அனைத்து பொருட்களும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அக்காலத்தில் அட்லஸ்ஸை பார்த்ததே கிடையாது. ஆனால் இன்று மாணவச்செல்வங்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது. ஒரு காலத்தில் மிட்டா, மிராசு வீட்டுப்பிள்ளைகள் மடியில் இருந்து வந்த மடிக்கணினியை இன்று குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் மடியில் தவழும் வகையில் தமிழக முதலமைச்சர் அம்மா விலையில்லா மடிக்கணினியையும் தந்துள்ளார். கிராமப்பகுதியில் இருந்து பள்ளிக்கு வருபவர்களுக்கு இலவச பஸ்பாஸ். அருகில் இருந்து வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியும் தந்துள்ளார் நமது முதலமைச்சர். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக படித்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பொ.சங்கர் பேசினார்.

விழாவில் தாட்கோ வாரிய முன்னாள் தலைவர் எஸ்.கலைச்செல்வன், என்சிஎம்எஸ் தலைவர் கண்ணபிரான், கூட்டுறவு சங்க இயக்குநர் ராம்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் நன்றி கூறினார். இவ்விழாவில் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 276 பேருக்கும், சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 288 பேருக்கும், புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 242 பேருக்கும், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 52, மாணவியர்கள் 20 என 72 பேருக்கும் என 4 பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள், 584 மாணவியர்களுக்கு மொத்தம் 878 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்