முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டம்:அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

புதன்கிழமை, 8 மார்ச் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு மானிய விலையில் உலர் தீவனங்கள் வழங்க 300 கிடங்குகளுக்கு ரூ. 54 கோடியே 81 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை கால்நடை மருந்தக உலர் தீவன கிடங்கில் கால்நடைகளுக்கு உலர் தீவனம் வழங்கும் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பயனாளிகளுக்கு உலர் தீவனம் வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி காரணயமாக தீவன பற்றாக்குறையை போக்க தமிழகம் முழுவதும் 300 உலர் தீவன கிடங்குகளுக்கு ரூ.54 கோடியே 81 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 12 உலர் தீவன விற்பனை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தீவன கிடங்கிற்கும் உலர் தீவனம் கொள்முதல் செய்ய ரூ.18.27 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மானிய விலையில் கிலோ ஒன்றிற்கு ரூ.2 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.முருகன் கலந்து கொண்டார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.நா.சீனிவாசன், துணை இயக்குநர் மரு.அ.மகேஸ்வரன், உதவி இயக்குநர்கள் மரு.சி.இளங்கோவன், மரு.கே.வில்வம், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago