கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      கடலூர்
Mar 09-a

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் கடலூர் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டபிறகு தெரிவித்ததாவது, கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதில் 410 பள்ளிகளிலிருந்து 37,275 பள்ளி மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகிறார்கள். இதில் 18722 மாணவர்களும், 18553 மாணவிகளும் அடங்குவர். நமது மாவட்டத்தில் 118 தேர்வு மையங்கள் உள்ளன. 2700 அலுவலர்கள் இத்தேர்வு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தடையின்றி மின்சாரம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை மூலம் ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உடனிருந்தூர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: