எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இச்சிபுத்தூர் கிராமத்தில் புதிய கால்நடை மருந்தகத்தை சு.ரவி எம்எல்ஏ திறந்து வைத்தார் இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட இச்சிபுத்தூர் பஞ்சாயத்து மதுரா கிராமம் கடவாரி கண்டிகை இருக்கிறது. இந்த கண்டிகையில் கால்நடை கிளை அலுவலகம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை கிளை அலுவலகத்தினை முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு கால்நடை மருந்தகமாக தரம் உயர்த்தி அரசானை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தரம் உயர்த்தபட்ட கால்நடை மருந்தகம் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கால்நடை உதவி இயக்குனர் உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணபூஷணம் பால்ராஜ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரக்கோணம் சட்ட மன்ற உறுப்பினர் சு.ரவி கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து பேசினார். அவர் பேசிய போது, பல ஆண்டு காலமாக கால்நடை அலுவலகம் இங்கு செயல்பட்டு வருவதாக. கூறிhர்கள் மேலும், கால்நடைகளின் எண்ணிக்கை உயர்ந்து செல்வதால் மருத்துவமனை தரத்தை உயர்த்தி மருத்துவரையும் நியமனம் செய்து தர வேண்டுமென உங்கள் தலைவர் குணபூஷணம் பால்ராஜ் எப்பொழுதும் கோரிக்கை விடுத்து வந்தார். மேலும், கட்டிடத்திற்கான இடஒதுக்கீடையும் செய்திருப்பதாக கூறி வந்தார். அவரது கோரிக்கைபடி ரூ26 லட்சம் மதிப்பீட்டில் சொந்த கட்டிடமும் அமைய இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க கடமைபட்டு இருக்கிறேன் என்று பேசினார். நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகி பிரகாஷ், ஒன்றிய செயலாளர் ராஜா, கீழ்குப்பம் முனைவர் ஏ.எல்.நாகராஜன், இச்சிபுத்தூர் ஜி.எம்.மூர்த்தி, கிளை செயலாளாகள்; பால்ராஜ், கோவிந்தராஜ், மற்றும் வருவாய் அலுவலர் கணேசன், அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, கணேசன் ரெட்டியார், ஆனந்தன், வா.பாளையம், வெ.பாண்டியன், தக்கோலம் நகர செயலாளர் இமயன், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |