ஊட்டியில் வசந்த விழா கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      நீலகிரி

ஊட்டியில் வசந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டது.

                        பாரம்பரிய நடனம்

ஊட்டி அகில இந்திய வானொலி நிலையம், தென் மண்டல கலாச்சார மையம் மற்றும் ஊட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து ஊட்டியில் வசந்த விழா கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். ஓட்டல் சல்லிவன் கோர்ட் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விழாவில் நாட்டின் வடகோடி மாநிலமாக ஜம்மு_காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நடனகலைஞர்களின் ஆரிய நடனம், டோக்ரி நடனம் போன்ற நடனங்களையும், நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள், ஆதிவாசி பழங்குடியின மக்களான கோத்தர், தோடர் முள்ளுக்குறும்பர் மற்றும் திபெத்திய மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர். இவ்விழாவினை சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர். இங்கு நீலகிரியை பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய உணவு, ஜம்மு_காஷ்மீர் உணவு ஆகியவற்றின் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

விழாவில் அகில இந்திய வானொலி கூடுதல் இயக்குநர் மாலதி, தென்னிந்திய கலாச்சார மைய உதவி இயக்குநர் ரவீந்திரன், ரோட்டரி சங்க தலைவர் முரளி, மண்டல ஒருங்கிணைப்பாளர் மனோகரன், முன்னாள் தலைவர் பிரம்மன், உறுப்பினர்கள் வக்கீல் ஜெயராமன், பிரேமா, உதவி இயக்குநர் பமீலா கிளார்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: