எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்திலுள்ள பொன்னார் குளம் ஏரி, பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் குடிமராமத்து புனரமைக்கும் பணி துவக்க விழா நேற்று (13.03.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா கலந்து கொண்டு பொன்னார் குளம் ஏரி குடிமராமத்து மூலம் புனரமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்கள். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே மக்கள் பணியாற்றி வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மா விவசாயிகளையும், அதை சார்ந்த தொழிலையும் பாதுகாத்திட மழைநீர் சேமிப்பதற்கும் அதனை பாதுகாப்பதற்கும், குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்கள், தூர்வாரி கரைகள் பலப்படுத்தும் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டில் துவங்கப்படும் என ஆணையிட்டார்கள். அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு அப்பணிகளை துரிதப்படுத்தி இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் இப்புனரமைக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரி நீர்வரத்து கால்வாய்கள் ஆழப்படுத்தியும், அகலப்படுத்தும் பணிகளும், கரைகள் பலப்படுத்தும் பணிகளும், இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதாரம்) சார்பில் மொத்தம் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் 16 ஏரி, குளங்கள், கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ளுவதற்கு விவசாயிகளின் பங்கு மிகமிக முக்கியமானதாகும். இப்பணிகளை மேற்கொள்ள விவசாயிகளின் சார்பில் குழு அமைக்கப்பட்டு அதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் மூலம் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நபார்டு நிதியுதவியுடன் நடைபெறுகின்ற இப்பணி விவசாயிகளின் பங்களிப்புத் தொகை 10 சதவீதமும், நபார்டு நிதியுதவி 90 சதவீதமும் சேர்த்து 100 சதவீதம் நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைநீரை சேமிப்பதற்கும், நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கும் அதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாப்பதற்கும் இத்திட்டம் மிகவும் முக்கியமான பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தின்மூலம் ஏரியின் கரைகள் பலப்படுத்தப்படுவதோடு நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் ஆரம்பம்முதல் இறுதி வரை கண்டறியப்பட்டு அனைத்து நீர்வள கால்வாய்களும், ஆழப்படுத்தி அகலப்படுத்துவதோடு, நீர்வரத்து தடையின்றி வந்துசேர்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும், இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோன்ற குளங்கள் ஏரிகள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளுவதன் மூலம் ஏரிகள் மற்றும் குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரும் உயரும் நிலை உருவாகும். இன்று குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படவுள்ள பொன்னார்குளம் ஏரிக்கு கொல்லிமலையில் உற்பத்தியாகும் குண்டுமடுவு ஆற்றின் மூலம் நீர் கிடைக்கப்பெறுகின்றது. இந்த ஏரியில் 4 மதகுகளும், ஒரு வழிந்தோடியும் உள்ளன. ஏரிக்கரை 1600 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த ஏரியின் மூலம் 153.070 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பளவில் பயன்படுகின்றது. மேலும் இந்த ஏரியின் மூலம் பொன்னார்குளம் மற்றும் அக்கியம்பட்டி ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஏரியின் முழு கொள்ளளவு உயரம் 181.235 மீட்டர் ஆகும். ஏரிக்கரையின் முழுஉயரம் 183.095 மீட்டராகும். ஏரியின் முழு நீர்கொள்ளளவு 11.30 மில்லியன் கனஆகும். ஏரியின் நீர்த்தேங்கியுள்ள பகுதி 42.90 ஹெக்டேர் (ஏறத்தாழ 100 ஏக்கர்) ஆகும். இந்த ஏரிக்கு வருகின்ற நீர்வரத்து கால்வாயின் நீளம் 7500 மீட்டர் ஆகும். இவ்வாறு அமைந்துள்ள இந்த பொன்னார் குளம் ஏரியானது ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து மூலம் கரையை பலப்படுத்தி ஏரியின் வழிந்தோடியில் கான்கிரீட் சுவர் அமைத்து நீர்கசிவை ஏற்படுவதை தடுத்திடவும், பாசனதாரர்களின் 10 சதவீத பங்களிப்போடு குடிமராமத்து பணி மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டு அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு செயல்படுத்தி வரும் குடிமராமத்து பணி திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பை முழுமையாக அளித்திட வேண்டும். இப்பணி விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைவர் கண்காணிப்பில் நடைபெறுகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. மேலும் மேட்டூர் டிவிசன் கிழக்கு கரை பாசன பகுதியின் 3 பாசன வாய்க்கால்கள் இடம்பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின்கீழ் நாமக்கல் மாவட்டத்தின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 13 ஏரிகளுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், 3 கால்வாய்கள் தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 16 ஏரி குளங்கள், கால்வாய்கள் குடிமராத்து திட்டத்தின்கீழ் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீர்வரத்து கால்வாய்கள் சரிசெய்யப்பட்டு மழை காலங்களில் வருகின்ற நீர் தடையின்றி இந்த ஏரிகள் மற்றும் குளங்களில் தேங்குவதற்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டமாகும். இத்திட்டத்தினை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பங்கேற்று தங்களின் பங்களிப்பை செலுத்தி இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர், நாமக்கல் ஆர்.பாஸ்கரன், இராசிபுரம் ஜெ.கோபி, உதவி பொறியாளர் சேந்தமங்கலம் ஆர்.சதீஸ்குமார், சேந்தமங்கலம் வருவாய் வட்டாட்சியர் க.பாலகிருஷ்ணன், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.வெங்கடாசலம், எம்.முனியப்பன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மின்னாம்பள்ளி கே.நடேசன், அட்மா கமிட்டி தலைவர்கள் ஜி.பி.வரதராஜன், எம்.காளியப்பன், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் எஸ்.பி.தாமோதரன், நாமகிரிப்பேட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, அக்கியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சி.சுப்ரமணியம் உட்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
விராட் கோலி குறித்து யான்சென்
01 Dec 2025விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அண
-
கனமழை எதிரொலி: புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
01 Dec 2025சென்னை : சென்னை புழல், பூண்டி, செம்பரம் பாக்கம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
-
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி
01 Dec 2025கொழும்பு, இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார்.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு
01 Dec 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சம்பவ இடத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
-
எஸ்.ஐ.ஆர். பணிசுமையால் உ.பி.யில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
01 Dec 2025லக்னோ : வாக்காளர் பட்டியல் திருத்த பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை செய்து கொண்டார்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: முதல் நாளே முடங்கியது மக்களவை
01 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் மக்களவை முதல
-
கார்கே, ராகுல் தலைமையில் இன்டியா கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனை
01 Dec 2025புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
01 Dec 2025சென்னை, கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன்: திருமாவளவன்
01 Dec 2025வேலூர், 18 மணி நேரம் கட்சிப் பணி செய்கிறேன் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஆதங்கத்துன் தெரிவித்துள்ளார்.
-
டித்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
01 Dec 2025சென்னை, டித்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அவர் பெரிய தலைவர் இல்லை: இ.பி.எஸ். விமர்சனத்திற்கு செங்கோட்டையன் பதில்
01 Dec 2025கோவை : எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல; அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை என த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
-
விராட் கோலியா- டெண்டுல்கரா..? - உலகின் சிறந்த பேட்ஸ்மேன் குறித்து சுனில் கவாஸ்கர் பதில்
01 Dec 2025ராஞ்சி : விராட் கோலியா- டெண்டுல்கரா..? யார் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார்.
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்கா
01 Dec 2025வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
மகனுக்கு சேகர் என பெயர் சூட்டினார் எலான் மஸ்க்..!
01 Dec 2025வாஷிங்டன், எனது மனைவி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் தனது மகனுக்கு சேகர் என்று எலான் மஸ்க் பெயர் சூட்டியுள்ளார்.
-
கனமழை எதிரொலி: அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
01 Dec 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழம் சார்பில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
-
டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவா..? - இந்திய முன்னணி வீரர் விராட் கோலி பதில்
01 Dec 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றும் இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
டித்வா புயல், கனமழை எதிரொலி: தமிழகத்தில் பலி 5 ஆக உயர்வு
01 Dec 2025சென்னை, டித்வா புயலால் ஏற்பட்ட பலத்த மழையில் சிக்கி தமிழகம் முழுவதும் 5 பேர் பலியாகி உள்ளனர்.
-
வட மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை மையம் தகவல்
01 Dec 2025சென்னை, சென்னை வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஈ.பி.எஸ். ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை - செங்கோட்டையன் தாக்கு
01 Dec 2025சென்னை : ஈ.பி.எஸ். ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
01 Dec 2025காபூல், ஆப்கானிஸ்தான் பைசாபாத் அருகே நேற்று காலை 7.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
-
சாரா மறைவுக்கு ஜோ பைடன் நிர்வாகமே பொறுப்பு: அமெரிக்க அரசு குற்றச்சாட்டு
01 Dec 2025வாஷிங்டன், சாரா மறைவுக்கு ஜோ பைடன் நிர்வாகமே பொறுப்பு என்று அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.
-
வாட்ஸ் அப் பயன்படுத்த இனி ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம்: மத்திய அரசு புதிய உத்தரவு
01 Dec 2025டெல்லி, மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
-
திருப்பதியில் பலத்த மழை
01 Dec 2025திருப்பதி : திருப்பதியில் கனமழை காரணமாக பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
-
கனமழையால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட பயிர்கள் குறித்த கணெக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: 14 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Dec 2025சென்னை, கனமழையால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலை உள்ளிட்ட பயிர்கள் குறித்த கணெக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று 14 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உ


