ரூ.7.25 லட்சம் மதிப்பில் பையனப்பள்ளி ஏரி மராமத்து பணிகள் அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தகவல். கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பையனப்பள்ளி ஏரியில் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில், குடிமராமத்து திட்டப் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்புடன் ஏரிகளை பழுதுபார்க்க முன்பு நடைமுறையில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தில் 100- கோடிக்கு பொதுவாக நிர்வாக ஒப்புத்தல் அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதல் 10 சதவிகிதம் விவசாயிகளின் பங்களிப்பு உடல் உழைப்பு, பொருட்களின் விலை அளித்தல், சங்கத்தில் இருந்து தொகையாக வழங்குதல் மீதம் உள்ள 90 சதவிகிதம் அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இந்த குடி மராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் பையனப்பள்ளி ஏரியினை பழுதுபார்க்க ரூ. 7.25 லட்சம் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஏரியின் கரையிலும் நீர் தேங்கும் பரப்பிலும், வழங்கு வாய்களிலும் உள்ள புல் பூண்டுகள், முட்புதர்கள் அகற்றபடும். ஏரி கரையின் மீது மழையினாலும், கால்நடைகளினாலும் ஏற்பட்ட குழிகளை மண் நிரப்பி சரி செய்தல் ஏரியின் வழங்கு வாய்காலிலும் மிகுதி நீர் செல்லும் பகுதிகளிலும் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுதல், மிகுதி நீர் செல்லும் பகுதியில் சீரமைத்தல் ஏரி கரையின் முன் பகுதியில் சேதமடைந்துள்ள அலைதாங்கி கற்கலை பிரித்தெடுத்து மீண்டும் சரியாக பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக ஏரிகள் பராமத்து பணிகளை நேற்று (13.03.2017) துவக்கி வைத்ததையடுத்து, அமைச்சர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பையனப்பள்ளி ஏரியில் குடி மராமத்து திட்ட பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ் நாடு முதலமைச்சர் ஆலோசனையின் படி தமிழகத்தில் முதற்கட்டமாக ரூ. 100 கோடி மதிப்பில் 1,519 - ஏரிகளில் பொதுப்பணித் துறை மூலமான நீர் நிலைகளை மேம்படுத்தும் வகையில் ஏரிகளை தூர் வாரி கரைகளை பலப்படு;த்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத்திப்பள்ளம், தீர்த்தகிரிவலசை, பெனுகொண்டாபுரம், பையனப்பள்ளி, வீரராஜன் ஏரி, சித்தைய கவுண்டர் ஏரி, பீமாண்டபள்ளி ஏரி, விருப்பம்பட்டி ஏரி, பாலகுளி ஏரி, ஆலப்பட்டி ஏரி, வெலகலஅள்ளி ஏரி, சோக்காடி ஏரி, ஒட்டஅள்ளி ஏரி, துடுக்கனஅள்ளி ஏரி, மற்றும் லட்சுமிகண்டர் ஏரி, என 15 ஏரிகள் தேர்வு செய்து ரூ.1 கோடியே 8- லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் பையனப்பள்ளி ஏரி பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் கன மீட்டர் பரப்பில் மண் எடுத்து கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகள் அனைத்தம் 3 மாதத்திற்குள் முடிக்கப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவ சங்க தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ.கேசவன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் கோ.ரவிசந்திரன், கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி. தங்கமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் முனியப்பன், மது (எ) ஹேம்நாத், விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: