கர்நாடக அரசின் சார்பில், ரூ.400 கோடி செலவில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்தப்படுத்தும் புதிய திட்டம்: தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆபத்து

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      கிருஷ்ணகிரி

கர்நாடக அரசின் சார்பில் ரூ.400 கோடி செலவில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்தப்படுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டத்தால் தமிழ்நாட்டில் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்பி அங்குள்ள சாக்கடை மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து தமிழகத்தில் நுழைகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கொடியாளம் பகுதி வழியாக வரும் இந்த ஆறு ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி நீர்தேக்க திட்ட அணை, திருவண்ணாமலையில் உள்ள சாத்தனூர் அணை உள்ளிட்ட பல்வேறு நீர்தேக்கங்களை நிரப்பி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை செழிப்படைய செய்கிறது. இதனால் லட்சக்கனக்கான விவசாயிகள் பயன் பெறுகிறார்கள்.இந்த நிலையில் கர்நாடகா அரசின் தொழில்வளத்துறை, தென்பெண்ணை ஆற்றில் வரத்து£ர் மற்றும் பெல்லந்தூர் ஆகிய 2 ஏரிகளில் உள்ள நீரை சுத்தப்படுத்தி அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும், குடிநீர் இல்லாத பிற தேவைகளுக்காக பயன்படுத்தும் வகையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு தேவையான நிதியை இங்கிலாந்து அரசு கடனாக வழங்கவும் அதேபோல ஆற்றுநீரை சுத்தப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தையும் செயல்படுத்தவும் முன்வந்துள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தகால் என்ற தனியார் நிறுவனம் செய்ய உள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளிக்கவில்லைதென்பெண்ணை ஆற்றுநீரை சுத்தப்படுத்தும் இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால் தமிழகத்தில் தென்பெண்ணை ஆற்றுநீரை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலு£ர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து தரிசு நிலங்களாக மாறும் அவல நிலை உள்ளது. கர்நாடகா பகுதியிலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்றின் நீர் அதிக அளவு கழிவுநீராக இருந்தாலும் அதன் மூலம் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் ராகி, நெல், கரும்பு, தக்காளி, பீன்ஸ், கத்தரி, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விளைந்தன. தற்போது இந்த திட்டத்தினால் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்து ஏற்படும் சூழல் உள்ளது.எனவே கர்நாடகா அரசின் இந்த புதிய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது அதே போல இந்த திட்டத்தை தமிழக அரசு தடுத்து தமிழக விவசாயிகளை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: