தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

water

 காரைக்குடி:- உலகதண்ணீர் தினத்தினை முன்னிட்டு காரைக்குடி அருகேயுள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் வீடியோகாட்சிகளின் மூலம் தண்ணீர்சேமிப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளிதலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினர்.குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையபேரா. விமலேந்திரன் தண்ணீர் சேமிப்பு தொடர்பாக வீடியோபடங்கள் காண்பித்து சிறப்புரையாற்றி பேசுகையில் ,உலகதண்ணீர்தினம் என்பது முதன் முதலாக 1992ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழியாக முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.

ஒருசொட்டு நீர் இரண்டு மடங்கு வருவாய் தரும்.உலகத்தில் 21 விநாடிகளுக்கு ஒரு குழந்தை தண்ணீர் இல்லாமல் இறந்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. எனவே மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். முற்காலத்தில் தண்ணீர் சேமிக்கும் இடங்களை நமது முன்னோர்கள் 47 வகைகளில் வகைபடுத்தி நீரை சேமித்து பயன்படுத்தி உள்ளனர். என்று பேசினார். தண்ணீர் சேமிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சு மற்றும் ஓவியபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தனலெட்சுமி, உமாமகேஸ்வரி, கார்த்திகேயன், கார்த்திகா, பரத்குமார், பரமேஸ்வரி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ