முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Geeta-Jivan 2024-11-26

Source: provided

சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய சாதனைகள் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சமூக நலத்துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் "புதுமைப் பெண்” உயர்கல்வி உறுதித் திட்டம் மூலம் 2022–-2023 முதல் தொடங்கி இதுவரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கற்கும் 5,29,728 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் பெறுகின்றனர். அதேபோல் "தமிழ்ப்புதல்வன்” திட்டம் மூலம் 2024–-2025 கல்வியாண்டில் தொடங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6– முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 3,92,449 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்கள் "ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 75,000 குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதிகள் மொத்தம் 19 "தோழி” விடுதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும் 3 விடுதிகள் புனரமைப்பில் இருக்க, 26 புதிய விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்சோ வழக்குகளில் நிவாரணமாக பாதிக்கப்பட்ட 6,999 நபர்களுக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி திட்டங்கள் மூலம் 2021 முதல் 2025க்குள் ரூ.1,174 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,39,609 பயனாளிகள் தங்க நாணய நிதியுதவி பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து