முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2025      தமிழகம்
Raghupati 2024-10-28

Source: provided

புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. காணாமல் போகும் என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் திமுகவின் 2.0 தொடரும் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால் பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதமும், திருப்பூரில் இரண்டு மாதமும் திருச்சி திருநெல்வேலியில் மூன்று மாதமும் வேலை பார்க்கிறார்கள்.

இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே இருக்கின்றனர். அதனால் நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரந்தர வாசிகளாக இருப்பவர்கள் தான் வாக்களிக்க முடியும்.

2026 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும். விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை. கேரளா பி.எம். திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து