எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
சுற்றுப்பயணம்....
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், கான்பெராவில் முதல் டி20 போட்டி நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாக இந்திய இளம் வீரர் நிதீஷ்குமார் ரெட்டி, கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக முதல் போட்டியில் விளையாடவில்லை. மேலும், அவர் முதல் மூன்று போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
காயத்தால் அவதி...
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக நிதீஷ்குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின்போதும் அவர் காயத்தால் அவதிப்பட்டார். நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக நிதீஷ்குமார் ரெட்டி, இந்திய அணிக்குத் திரும்ப பி.சி.சி.ஐ.யும் முனைப்பு காட்டி வருகிறது. நிதீஷ்குமார் விலகியதால் இந்திய அணி மற்றொரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சிவம் துபே, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஹர்ஷித் ராணாவுடன் களமிறங்கியது. இருப்பினும், போட்டித் தொடங்கி 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் முதல் போட்டி கைவிடப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


