முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில், காச நோய் குறித்து விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம் சுகாதாரத்துறை சார்பாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் உலக காசநோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (24.03.2017) தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு.அசோக்குமார், மாவட்ட காசநோய் நோய் அலுவலர் மரு.ஏ.சுகந்தா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இப்பேரணியானது பேருந்து நிலையத்தில் தொடங்கி பெங்களுர் சாலை வழியாக அரசு தலைமை மருத்துவ மணையில் நிறைவடைந்தது. இதில் செயின் ஜோசப் செலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், பி.என்.எஸ். செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் மற்றும் ஜீவா செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்கள் 150 –க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்பேரணியில் காசில்லாமல் காசநோய் தடுப்போம், துப்பாதே துப்பாதே கண்ட இடத்தில் எச்சில் துப்பாதே, டி.பி. நோயிலிருந்து குணமடைய டாட்ஸ் முறையில் 6 மாதம் முதல் 8 மாதம் முதல் தொடர் சிகிச்சை பெறுதல், தடுப்போம் தடுப்போம் காசநோய் தடுப்போம், சுத்தமான காற்றை சுவாசி, நாடு நாடு சுத்தத்தை நாடு, டாட்ஸ் சிகிச்சை ஒன்றே காசநோயை முற்றிலும் குணப்படுத்த கூடியது ஆகிய வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி மாணவ மாணவியர்கள் கோஷங்கள் எழுப்பி பேரணியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மரு.கந்தசாமி, துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.முல்லை சாரதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் மருத்துவ அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago