முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      விழுப்புரம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் பின்வரும் இடங்களில் செயல்பட்டு வருகின்றன.மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள்: மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி.பள்ளி-நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி-புதூர்-சென்னை, செல்வம் மேல்நிலைப்பள்ளி-நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.மாணவியருக்கான விளையாட்டு விடுகள்: ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம்-சென்னை, பாரதி வித்யாபவன்-திண்டல்-ஈரோடு, செல்வம் மேல்நிலைப்பள்ளி-நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 02.05.2017 அன்று தொடங்கி 04.05.2017 வரை நடைபெற உள்ளது.மேலும் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதியில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ வாலிபால், பளுதூக்குதல், கபாடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜுடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை, மாணவியர்களுக்கான விளையாட்டு விடுதியில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, ஹாக்கி, நீச்சல், டேக்வோண்டோ, வாலிபால், பளுதூக்குதல், கபாடி, டென்னிஸ் மற்றும் ஜுடோ ஆகிய விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவமாணவியர் 2016-2017ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை மார்ச் 22-ஆம் தேதி முதல் அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதிகள் தொடர்பான விவரங்களை றறற.ளனயவ.வn.பழஎ.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அந்தந்த மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர்களிடம் வருகின்ற 20.04.2017க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்