Idhayam Matrimony

ஆரம்ப நிலையிலேயே காசநோயை குணப்படுத்தலாம்:துணை இயக்குநர் அசோக் பேச்சு

புதன்கிழமை, 29 மார்ச் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்ட காசநோய் மையம் சார்பில் உலக காசநோய் தின கருத்தரங்கு திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குருக்கையில் உள்ள அருணாவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் ஆர்.ராஜசேகரன் தலைமை தாங்க, தாளாளர் கே.சுரேஷ் காசநோய் மைய மருத்துவர் எம்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆங்கில துறைத் தலைவர் ஆர்.முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காசநோய் மருத்துவமனை துணை இயக்குநர் பி.அசோக் மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசுகையில் காசநோயால் 5 நிமிடத்துக்கு 2 பேர் உயிரிழக்கின்றனர். ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சை பெறாவிட்டால் மருந்துக்கு கட்டுப்படாத வீரியமிக்க காசநோயாக மாறும் அபாயம் ஏற்படும். விரைவான பரிசோதனை மற்றும் விரைவான சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஆரம்ப நிலையிலேயே காசநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றார். மேலும் அவர் பேசுகையில், காசநோய் கிருமியால் நோய் பரவும் விதம், நவீன பரிசோதனை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து காசநோய் விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த கருத்தரங்கில் சிகிச்சை அமைப்பாளர் ஏ.பிருந்தா கஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரதாப் , தினேஷ்குமார் ,குணசீலன் மேற்பார்வையாளர் மதுசூதனன், கல்லூரி பேராசிரியர் உஷாதேவி மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் காசநோய் மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago