பா.ஜ. தலைமை செய்தி தொடர்பாளர் நியமனம்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      அரசியல்
bjp flag(N)

புதுடெல்லி, பாரதிய ஜனதாவின் செய்திதொடர்பு பிரிவு தலைவராக அனில் பலூனி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கட்சி தலைவர் அமீத்ஷா நியமித்துள்ளார். துணைத்தலைவராக சஞ்சய் மயூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

பா.ஜ.வின் செய்திப்பிரிவு தலைவராக இருந்த ஸ்ரீகாந்த் சர்மா, உத்தரப்பிரதேச மாநில கேபினட் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பதிலாக அனில் பலூனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பலூனி ஒரு திறமையான செய்தி தகவல் தொடர்பாளர் மட்டுமல்லாது அமீத்ஷாவின் நம்பிக்கையை பெற்றவர். துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மயூக், பீகார் மாநில எம்.எல்.சி.யாக இருக்கிறார். இதற்கு முன்பு கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக பணியாற்றியவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: