கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி; கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் நலத் திட்டங்கள், சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி நேற்று (31.03.2017) அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியை கலெக்டர் சி.கதிரவன் , திறந்து வைத்து பார்வையிட்டார். இப்புகைப்படக்கண்காட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்பட கண்காட்சியில் பசுமை வீடு வழங்கும் திட்டம், மடிகனிணி வழங்கும் திட்டம், விலையில்லா கறவை பசுகள், மற்றும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்கள், திருமண நிதிவுதவி வழங்கும் திட்டங்கள், மகபேறு நிதிவுதவிகள் வழங்கும் திட்டங்கள், மழை நீர் சேகரிப்பு குறித்த புகைப்படங்கள் , விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி முதன் முறையாக முதலமைச்சராக பதவியேற்ற உடன் முதலில் கையெழுத்திட்ட 5 - முக்கிய திட்டங்களான 50 சதவிகித மானியத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிவுதவி ரூ.12 ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.18 ஆயிரம் ரூபாயாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீட்டு வசதி திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை இருமடங்காக உயர்வு, டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான கடைகளில் ஏற்கனவே மூடப்பட்ட 500 மதுப்பான கடைகளோடு கூடுதலாக 500 கடைகள் மூட ஆணை உள்ளடங்கிய வாசகங்கள் பொருந்திய டிஜிட்டல் விளம்பர பேனர் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு பொதுமக்கள் அரசின் சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இப்புகைப்படக்கண்காட்சியினை 2000 -க்கும் மேற்பட்ட பேருந்து பயணிகள், கல்லூரி மாணவ மாணவியர்கள், மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் நலபணிகள் இணை இயக்குநர் டாக்டர் கே.அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், மாவட்ட சுற்றுலா அலுவலர் டி.உமாசங்கர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சு.மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ( விளம்பரம்) மனோஞ்குமார், மூடநீக்கியல் வல்லுநர் முருகேசன், 108- ஆம்புலன்ஸ் மாவட்ட அலுவலர் ராமன், ஒருங்கிணைப்பாளர் டைட்டஸ் மற்றும் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: