முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் கருத்தரங்கு கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் கப்பியாம்புலிய+ர் ஏ.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித் துறை சார்பாக 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவியர்களுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கினை கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.இக்கருத்தரங்கினை தொடங்கி வைத்து, மாணவ மாணவியர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் கையேட்டினை வழங்கி கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:விழுப்புரம் மாவட்டத்தில் 48,000 மாணவ மாணவியர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்று கல்லூரிக்கு சென்று மேற்படிப்பை தொடர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மாணவ மாணவியர்கள் தேர்வில் வெற்றிபெறுவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 47,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதே பள்ளியில் மேல்நிலைப் படிப்பினை தொடரலாம். அல்லது மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப, தொழில் கல்வி சம்பந்தமான துறைகளில் சேர்ந்து படிக்கலாம். தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்க வேண்டும்.பள்ளி படிப்பு என்பது, அறிவுத் திறனை மட்டும் வளர்த்துக் கொள்வதற்கான இடம் அல்ல. அறிவுத்திறனுடன் வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகள், சமூக உணர்வுகள், தெளிவான சிந்தனை ஆகிவற்றை பெற்று எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைப்பதற்கான வேலையினை பெறுவதும் ஆகும். பள்ளிக் கல்வித்துறை சார்பாக தமிழகம் முழுவதும் மேற்படிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் கப்பியாம்புலிய+ர், மயிலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இக்கருத்தரங்கின் நோக்கம், தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் மாணவ மாணவியர்கள் எத்துறையை தேர்ந்தெடுப்பது, எக்கல்லூரியை தேர்ந்தெடுப்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வாக இக்கருத்தரங்கம் அமையும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும். பொறியியல் படிப்பினை தேர்வு செய்யும் மாணவர்கள் தலைசிறந்த பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.கலை மற்றும் அறிவியல் படிப்பு பயில விரும்பும் மாணவ மாணவியர்கள் அத்துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். எத்துறையாக இருந்தாலும், அத்துறையில் தலைசிறந்து விளங்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ வேண்டும். மாணவ மாணவியர்கள் படிப்பிற்காக கல்வி கடன் வழங்க தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொண்டு, நன்கு படித்து வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய வேண்டும். இதுபோன்ற கருத்தரங்கினை மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக்கொண்டு, சமுதாயத்தில் சிறந்த இடத்தை பெற வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில், முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், ஏ.ஆர். பொறியியல் கல்லூரி தாலாளர் மகாதேவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்