எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 127ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜெ.ரவிசங்கர் வரவேற்புரை ஆற்றினார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் “மதியின் விளைச்சல்” என்ற தலைப்பில் பேசுகையில் பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்புக்குரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்.
ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14வது மகன். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தவர். அங்கு அவர் 1915ல் பண்டைய இந்தியாவின் வாணிகம் என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார். காந்திஜி உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம். இப்படி எதனையும் வெளிப்படையாகப் பேசியவர் என்றார்.
கூட்டத்தில் ப.தங்கமணி, வண்டியூர் மாணிக்கராஜ், வ.முத்து, பி.பன்னீர்செல்வம், ஜான்பெலிக்ஸ் கென்னடி, கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, ஏ.சி.பாபுலால், கோ.ஏகாம்பரம், அ.பாலு, ராம.மீனாட்சிசுந்தரம், ஹைகூ.இரா.இரவி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.அண்ணாமலை, எஸ்.ஆனந்தராஜ், முனைவர் க.சின்னப்பா, வீ.காளீஸ்வரன், கவிஞர்கள் சு.கோபாலகிருஷ்ணன், மீ.ராமசுப்பிரமணியன், அழ.சிதம்பரம் கலந்து கொண்டனர். ரெ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


