முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தியாகிகள் நிறைந்த மாவட்டம் தூத்துக்குடி கலெக்டர் எம் ரவி குமார் புகழாரம்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர், வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் எம் ரவி குமார் அரசின் சார்பில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் எம் ரவி குமார் பேசியதாவது:-தூத்துக்குடி மாவட்டம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி அவர்களும், தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகாகவிபாரதியாரும், இம்மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள். இது போன்று வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வெள்ளையத்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் போன்றார் வரிசையில் வீரன் சுந்தரலிங்கமும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் வெள்ளையனை எதிர்த்து போரிட்டார். வீரத்தளபதி சுந்தரலிங்கம் தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தகர்க்கவோ, எதிரிகளை உள்ளே விடவோ ஒருபோதும் நடக்க விடமாட்டேன் என்று தனது வாளின் மீது சத்தியம் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை காப்பதற்காகவே தன் உயிரை மாய்த்து வீரவரலாற்றில் இடம் பெற்றார். வீரன் சுந்தரலிங்கம் 247 ஆண்டுகளாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால், அவருடைய வீரமும், சுதந்திரப்போராட்ட போர்குணமும், தியாகமும் ஆகும். போர் மூலமாகவும், அகிம்சை மூலமாகவும், வணிகத்தின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும் இப்படி பல விதமாக நம்மாவட்டத்தில் போராடி விடுதலையை நம் தலைவர்கள் பெற்;றுத்தந்துள்ளார்கள். இந்திய வரலாற்றில் முதல் இந்திய சுதந்திரப்போர் 1857-ல் வங்கதேசத்தில் ஆரம்பித்தது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான முதல் சுதந்திரப்போர் 1799-லே பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஆரம்பித்து விட்டது. மேலும், இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதல் தற்கொலைப்படையினராய் உயிர்த்தியாகம் செய்தவர் வீரன் சுந்தரலிங்கம் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மனும், வீரன் சுந்தரலிங்கமும் சாதி சமய வேறுபாடு இன்றி சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.தமிழ்நாடு அரசு தியாகிகளை கவுரவிக்க இதுபோன்ற அரசு விழாக்களை எடுத்து வருகிறது. சுதந்திரத்தின் மதிப்பை நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீரத்தினை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்;க வேண்டும் என்பதற்காக அரசால் தியாகிகளுக்கு மணிமண்டபங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பெற்ற சுந்திரத்தை போற்றும் வகையில் வருங்கால இளைஞர்கள் திகழ வேண்டும். இங்கு அமைந்துள்ள பீரங்கி மேடை மற்றும் வீரன் சுந்தரலிங்கம் முழு உருவ வெங்கலச் சிலை அமைப்பது கோரிக்கைகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- என தெரிவித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், 15 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 9 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் ஒப்படைப்பும், 6 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்புத்திட்டத்தின் கீழ் வீடுகட்டுவதற்கான உத்தரவுகளையும், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பசுமை வீடுகளும், புதுவாழ்வு திட்டத்தின் மூலம் 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவியும், தனி நபர் கடன் உதவித்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு கடன் உதவிகளும், ஆக மொத்தம் 133 நபர்களுக்கு ரூபாய் 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வீரன் சுந்தரலிங்கம் வழித்தோன்றல் பொன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன்;, கோவில்பட்டி கோட்டாச்சியர் திருமதி.பி.அனிதா, புதுவாழ்வுத்திட்ட மேலாளர் கர்ணன், ஓட்டப்பிடாரம் வட்டாச்சியர் நம்பிராயர்;, தனிவட்டாச்சியர் (ச.பா.தி) சுந்தரகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்