முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் கூறினார்.

மூன்று நாட்கள் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்று நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் ஆய்வு செய்து வந்தது. மூன்றாவது நாளான நேற்று ஊட்டியிலுள்ள தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தலைமை தாங்கி பேசியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

அரசுக்கு பரிந்துரை

தமிழகத்தின் 15_வது சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக்குழு கடந்த மூன்றா நாட்களாக ஊட்டியில் ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறது. அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் திறமையாக செயல்பட இக்குழு வலுவாக இருக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல்2014ம் ஆண்டு வரை மதிப்பீட்டுக்குழு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பள்ளி கல்வித்துறை, வனத்துறை, பால்வளத்துறை, சுற்றுலாத்துறை, கிராமச் சாலைகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சில பரிந்துரைகளை செய்திருக்கிறது. அந்த பரிந்துரைகளின் பேரில் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்பதை கடந்த மூன்று நாட்களாக இம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.

சொந்த கட்டிடங்கள்

மறைந்த முதல்வர் அம்மா அரசு ஏழை_எளிய மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதை சொந்த கட்டிடங்களைக்கு மாற்ற இக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் தூதூர் மட்டம், சேரம்பாடியில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றவும், அத்துடன் பள்ளிகளில் அடிப்படை மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது. கிராமப் பகுதிகளுக்கும் செல்லும் சாலை ஒரு பகுதி நெடுஞ்சாலை துறைக்கும், மற்ற பகுதி இதர துறைக்கும் சேருவதாக இருந்தால் அந்த சாலைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவும் இக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சிறப்பாக நடைபெறும் திட்டப்பணிகள்


ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் ஆய்வுக்கூட்டத்தில் 100 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாவும், 25 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆணையும், 41 சுய உதவிக்குழுக்களுக்கு இணைப்புக்கடனாக ரூ.1.92 கோடியும், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதியில் 30 நபர்களுக்கு திட்டப்பணி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசின் திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திறம்பட செயல்படுத்தி வரும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கரை இக்குழு வெகுவாக பாராட்டுகிறது. இக்குழுவானது மாத்திற்கு மூன்று மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு மதிப்பீட்டுக்குழு தலைவர் பி.எம்.நரசிம்மன் தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட தமிழக சட்டமன்ற பேரவை செயலர் ஜமாலுதீன், மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் மற்றும் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago