காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டின் வங்கி கடன் திட்ட அறிக்கை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 5 மே 2017      காஞ்சிபுரம்
kanchipuram

 

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியாக இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வங்கிகளின் கடன் திட்டத்தினை ஒருங்கிணைத்து மாவட்ட முன்னோடி வங்கி தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான 2017-18 ஆம் நிதியாண்டின் வருடாந்திர வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் பா.பொன்னையா வெளியிட்டார்கள் 

திட்ட அறிக்கை

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து வங்கிகளின் மூலம் நடப்பு நிதியாண்டில் 4இ543.96 கோடி ரூபாய் மொத்த கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமை கடனாக 4076.43 கோடி ரூபாயும்விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 1962.94 கோடி ரூபாயும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 1000.59 கோடி ரூபாயும் மற்றும் இதர முன்னுரிமை கடனாக 1112.90 கோடி ரூபாயும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ப.சண்முகநாதன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மு.ஹெப்சூர்ரஹ்மான் மற்றும் பல்வேறு வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: