முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
NASA 2024 08 13

Source: provided

சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம். 

சர்வதேச விண்வெளி மையம், பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. அதனால் அதில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்கின்றனர். தற்போது அந்த விண்வெளி மையத்தில் இந்தியாவின் சுபான்ஷுசுக்லாவும் இருக்கிறார். இந்த விண்வெளி மையத்தை பூமியில் இருந்து சில நேரங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம். இந்த மையத்தை எந்த பகுதி மக்கள் பார்க்கலாம் என்பதனை நாசா தெரிவித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று முதல் 12-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் விண்ணில் வலம் வரும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். அதன்படி இன்று காலை 5 மணியளவில் வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் தெரியும். இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம். இரவு 9.38 மணி முதல் 9.41 மணி வரை பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்திய பகுதிகளில் இருந்து பார்க்கலாம். மீண்டும் 10-ந் தேதி காலை 4.58 மணி முதல் 5.06 மணி வரை சென்னையில் பார்க்கலாம். அதிவேகத்தில் அது செல்வதால் ஓரிரு நொடி மட்டுமே விண்ணில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து